உன் மீது நான் கொண்ட ஆசை
*உன் மீது நான் கொண்ட ஆசை* ....
உன் மீது கொள்ளை ஆசை -உன் மனதை கொள்ளையடிக்க ஆசை....
உன் விழி பார்க்க ஆசை -
உன் விழியில் என்னை தொலைக்க ஆசை....
காற்றிடைவெளியின்றி உன்னை நெருங்க ஆசை -
காலமெல்லாம் உன்னுடனிருக்க ஆசை...
உன் சுவாசம் என்னை தீண்ட ஆசை -
உயிரோடு உயிராக உன்னுடன் சேர ஆசை...
உன் புன்னகையில் என் மெய் சிலிர்க்க ஆசை -
உன் மௌனத்தின் அர்த்தத்தை புரிந்துக் கொள்ள ஆசை....
காலம் மறந்து உன் தோள் சாய ஆசை -
காலமெல்லாம் உன் மடி மீது எழாமல் உறங்க ஆசை......
குழந்தையைப் போல் உன்னை கொஞ்சிட ஆசை -
குறும்புகளால் உன்னை மிஞ்சிட ஆசை....
உன் மார்பு கூட்டில் நுழைய ஆசை -
உன் மார்பு சூட்டில் என் குளிர் தணிக்க ஆசை....
உன் நுனி விரலோடு மோதிரமாய் என் விரல் கோர்க்க ஆசை -
உனக்கே முழு சொந்தமாய் மாறிட ஆசை...
*இதுவே உன் மீது நான் கொண்ட ஆசை* ....
❤💚❤
Comments
Post a Comment