உன் மீது நான் கொண்ட ஆசை
*உன் மீது நான் கொண்ட ஆசை* .... உன் மீது கொள்ளை ஆசை - உன் மனதை கொள்ளையடிக்க ஆசை.... உன் விழி பார்க்க ஆசை - உன் விழியில் என்னை தொலைக்க ஆசை.... காற்றிடைவெளியின்றி உன்னை நெருங்க ஆசை - காலமெல்லாம் உன்னுடனிருக்க ஆசை... உன் சுவாசம் என்னை தீண்ட ஆசை - உயிரோடு உயிராக உன்னுடன் சேர ஆசை... உன் புன்னகையில் என் மெய் சிலிர்க்க ஆசை - உன் மௌனத்தின் அர்த்தத்தை புரிந்துக் கொள்ள ஆசை.... காலம் மறந்து உன் தோள் சாய ஆசை - காலமெல்லாம் உன் மடி மீது எழாமல் உறங்க ஆசை...... குழந்தையைப் போல் உன்னை கொஞ்சிட ஆசை - குறும்புகளால் உன்னை மிஞ்சிட ஆசை.... உன் மார்பு கூட்டில் நுழைய ஆசை - உன் மார்பு சூட்டில் என் குளிர் தணிக்க ஆசை.... உன் நுனி விரலோடு மோதிரமாய் என் விரல் கோர்க்க ஆசை - உனக்கே முழு சொந்தமாய் மாறிட ஆசை... *இதுவே உன் மீது நான் கொண்ட ஆசை* .... ❤💚❤